தேனிலவு சென்ற இடத்தில் தகராறு செய்ததாக கணவர் மீது புகாரளித்த நடிகை..!
தன்னை தாக்கியதாக இந்தி நடிகை பூனம் பாண்டே அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். தனது நீண்டநாள் காதலரை என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
கணவர் தன்னை அடித்து சித்திரவதை செய்ததாக போலீசிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இருவரும் சமரசம் ஆகி விட்டனர்.
இந்த நிலையில் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணவர் தாக்கியதில் தலை, முகம் மற்றும் கண்களில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






