பாகிஸ்தான் மலாலாவுக்கு நிக்காஹ் – டுவிட்டரில் பதிவு
பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனக்கு திருமணம் ஆகி விட்டதாக பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு கல்வி வேண்டும் என்பதற்காக போராடிய மலாலாவை தாலிபன்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவர் லண்டனில் மருத்துவம் பெற்றார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 24 வயதான மலாலா திருமணம் செய்து கொண்டதாகவும் தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் தன் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள் எனவும் நாங்கள் இருவரும் வாழ்க்கைக்குத் துணையாக இருக்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்துடன் ஒரு வீட்டில் சிறிய விழாவை கொண்டாடினோம் எனவும் உங்களுடைய ஆசீர்வாதத்தை அனுப்புங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.






