நாளை நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து..!
நாளை நடைபெறவிருந்த மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






