தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பேத்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்க மடத்தில் தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் சென்றுகொண்டிருந்த பேத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவரை வெள்ளிக்கிழமை அடக்கம் செய்ய உறவினருடன் சென்று ஐந்தாம் வகுப்பு சிறுமி திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரதேடி சிறுமியின் உடலை கண்டெடுத்தனர்.
அடையாறு ஆற்றில் மணல் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






