--- --:--:-- --

ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி பிணமாக மீட்பு..!

8

சென்னையில் ஐ‌ஏ‌எஸ் அதிகாரியின் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கழிப்பிடத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரபதிவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சிவனருள்.

 

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. காலை கழிவறைக்கு சென்ற சுமதி வெளியே வராததால் பணியாளர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

 

இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவர் ரத்தக்கரை படிந்த நிலையில் இறந்து கிடந்ததாக கூறப்படும் நிலையில் தற்கொலை கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

ஆறு மாதங்களாக சுமதி மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon