பல் மருத்துவக் கல்லூரி மாணவி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!
கேரளாவில் பல் மருத்துவக் கல்லூரி மாணவி மானசா கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொச்சியில் உள்ள கொத்தமங்கலம் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவியை கடந்த ஜூலை மாதம் ஒரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் துப்பாக்கியை விற்ற நபர், இடைத்தரகர் ஆகியோர் குற்றவாளிகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.






