கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்வு..!
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்த்தி 2,133 ரூபாய்க்கு விற்கப்படுவதால் உணவகங்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று வணிக பயன்பாட்டிற்காக 268 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. 2,133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி 915 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சென்னையில் தான் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் அதிகபட்சமாக 2,133 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உணவகங்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.






