--- --:--:-- --

அவிநாசி- பழங்கரை கே.2045  கூட்டுறவு சங்கத்தில் பட்டாசு கடை துவக்கம்

360c26e1-9add-44a4-9305-cc8602b7f572

அவிநாசி அடுத்துள்ள கே.2045 பழங்கரை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பட்டாசு கடை திறப்பு விழா நடந்தது.

 

வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவா் ஏ.வி.தனபால் தலைமை தாங்கினார். அதிமுக ஒன்றிய கழக செயலாளரும், ஏசிஎம்எஸ் தலைவருமான மு.சுப்பிரமணியம், துணைத் தலைவா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவா் துரைசாமி ரிப்பன் வெட்டி விற்பனையை துவக்கி வைத்தார்.

 

இந்த ஆண்டு  அனைத்து வகை புதிய ரக பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் செயலர்  வடிவேல், இயக்குனர்கள் காா்த்திகேயன், முருகேசன், பழனிச்சாமி, பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon