--- --:--:-- --

நவம்பர் 1 முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு இல்லை..!

9

ழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் வரும் ஒன்றாம் தேதி திறப்பு இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகளை திறக்க முடிவு தற்போது இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

 

எல்கேஜி, யுகேஜி படிப்புகளுக்கு பள்ளிகள் திறக்க ஆலோசனை செய்யப்பட்டது. நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்தான குழப்பங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon