--- --:--:-- --

ஆர்யன்கானுடன் கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலம்..! இம்தியாஸ் வீட்டில் சோதனை..!

5

மும்பை சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடத்திய விவகாரத்தில் படத் தயாரிப்பாளரான தொழிலதிபர் இம்தியாஸ் வீட்டில் போதைபொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 

சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட அஜத் கான் என்பவர் அளித்த வாக்குமூலத்தை அடுத்து பாந்திராவிலுள்ள இம்தியாஸ் வீட்டில் பல மணி நேரம் சோதனை மற்றும் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

 

இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் நைஜீரிய நாட்டவர் ஒருவரை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 130 கிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon