500 ரூபாய்க்கு மனைவியை விற்ற கணவன்..! புகாரளித்த மனைவி..!
குஜராத்தில் 500 ரூபாய்க்கு மனைவியை கணவன் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் பணம் இல்லாத சமயங்களில் பணம் தேவைப்பட்டால் நகைகள், வாகனங்கள் போன்றவற்றை அடகு வைப்பதை விற்பனை செய்வதையோ கேள்விபட்டிருப்போம்.
சில நபர்கள் குடும்ப அட்டையை அடகு வைத்து பணம் பெறுவார்கள். ஆனால் ஒருவர் 500 ரூபாய்க்கு தன் மனைவியை விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அலகாபாத் பகுதியை சேர்ந்தவர் இவர்.
கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி 21 வயதுள்ள தனது மனைவியை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு வந்த சோனு சர்மா என்பவரிடம் 500 ரூபாயை பெற்றுக் கொண்ட தீரச் தன்னுடைய மனைவியை அந்த நபருடன் செல்லும்படி கூறியுள்ளார்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற சோனு சர்மா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை பெண்ணின் கணவனையும் பாலியல் வன்கொடுமை செய்த நபரையும் 24 மணி நேரத்தில் கைது செய்தது.






