--- --:--:-- --

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர்..!

5

வள்ளியூர் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் ஜாக்சன்.

 

கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணமான செல்வி என்பவருடன் பழகி வந்துள்ளார். அவரது 13 வயது மகளுக்கும் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் ஜாக்சன். மகள் கூறியதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார் செல்வி.

 

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜாக்சன் மற்றும் செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon