--- --:--:-- --
10

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நபர் ஒருவர், தனது வாகனத்தின் முன்பாக மடிக்கணினியை வைத்துக்கொண்டு, அதில் பணியாற்றிக் கொண்டே சாலையில் பயணம் செய்துள்ளார்.

 

 

இதனைக் கண்ட சக வாகன ஓட்டுநர்கள், இச்சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த ஆபத்தான பயணக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சாலை விதிகளைச் சிறிதும் மதிக்காமல், சாலையில் கவனம் செலுத்தாமல், சக வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு தரும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கண்டுபிடித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் அவருக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon