--- --:--:-- --

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

6

ளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் ஒன்பது சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டங்களில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon