--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

3

கோவை, நீலகிரியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதன் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

 

அதேபோல், நாளை மற்றும் நாளை மறுதினம் கோவை, நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

 

 

இதேநேரம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இயல்பை விட அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

 

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon