--- --:--:-- --

டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்க முயன்ற நபர் மின்சாரம் தாக்கி பலி..!

2

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உரிய அனுமதியின்றி டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்க முயன்ற ரைஸ்மில் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

கோட்டையை சேர்ந்த விக்னேஷ் என்ற ரைஸ்மில் ஆபரேட்டர் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பைத் துண்டித்து விட்டு டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதுபோல் கீழே உள்ள பைப்பை திருப்பிய நிலையில் மின்சாரம் சரியாக நிறுத்தப்படவில்லை.

 

இதனை அறியாமல் டிரான்ஸ்பார்மரில் விக்னேஷ் மின்சாரம் தாக்கி பலியானார். மின் பிழுது ஏற்பட்டால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர பாதுகாப்பற்ற முறையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon