--- --:--:-- --

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து சித்து ராஜினாமா..!

1

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோட் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

 

பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்ற முதல் அமைச்சராக இருந்த கேப்டன் அமரேந்தர் சிங்கிற்க்கும் அவருக்கும் இடையே நிறைய பிரச்சினைகள் எழுந்தது. அது ஒரு கட்டத்தில் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என கூறி முதலமைச்சர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

 

இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில முதலமைச்சராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த சரஞ்சித் சிங் நியமிக்கப்பட்டார். அமரேந்தர் சிங் பதவி விலகியதில் இருந்து நவ்ஜோத் சிங் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.

 

சித்துவை தேர்தலில் வேட்பாளராக அறிவித்தால் அவரை தோற்கடிப்பேன் எனவும் அவர் பாகிஸ்தானுடன் தொடர்புள்ள தேச விரோதி என்றும் அவர் தெரிவித்திருந்தார். கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கு சித்து தான் காரணம் என்ற விமர்சனமும் எழுந்தது.

 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சித்து அனுப்பி வைத்துள்ளார்.அதில் பஞ்சாப் காங்கிரஸ் மற்றும் பொதுமக்களின் நலனில் எந்த சமரசத்திற்கும் இடம் தரக்கூடாது என்பதற்காக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

 

அதேநேரம் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon