--- --:--:-- --

அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை..!

8

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு பேருந்தை வழிமறித்து திடீரென கண்ணாடியை உடைத்த காட்டு யானையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். நீலகிரி வனப்பகுதியில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரும் காட்டு யானைகள் அடிக்கடி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

 

நேற்று கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நடந்துள்ளது. அப்பொழுது கோத்தகிரியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்துள்ளது.

 

இதை பார்த்த ஓட்டுனர் இருக்கையில் இருந்து உடனே எழுந்து சென்றார். பின்னர் அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon