--- --:--:-- --

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

9

காராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூலை மாதம் கொரொனா இல்லாத ஊரகப் பகுதிகளில் பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது.

 

கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் தொற்று பாதிப்பு குறைந்த ஊரகப் பகுதிகளில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் மும்பை, தானே, பூனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட வில்லை.

 

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி ஊரகப் பகுதிகளில் 5 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon