செங்காடு கிராமத்தில் 7 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய்..!
காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் மருத்துவமனையில் தொடர்ந்து டயாலிசிஸ் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை அரசு மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் விவாதித்து இதற்கான காரணத்தை கண்டறிய சோதனையில் ஈடுபட்டனர். தற்பொழுது செங்காடு கிராமத்தில் சோதனை செய்து வருகின்றனர்.






