தவறான முடி திருத்தத்தால் முடியை இழந்த பெண்..! 2 கோடி இழப்பீடு..!
தவறான முடி திருத்தத்திற்கு ஆளாகி தனது நீளமான கூந்தலை இழந்த பெண்ணிற்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்குமாறு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முடி பராமரிப்பு விளம்பரத்திற்காக மாடலிங் செய்து வந்த பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் உள்ள சலூனுக்கு முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார்.
அங்கு முடி திருத்துபவரிடம் தனது கூந்தலின் முடிவில் இருந்து நான்கு அங்குலம் அளவுக்கு மட்டும் வெட்டும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு மாறாக மொத்த முடியின் நீளத்தையே 4 அங்குலமாக தவறுதலாக முடி திருத்துபவர் வெட்டியுள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அவர் புகார் அளித்த பொழுது அந்த நிறுவனம் அந்தப் பெண்ணிற்கு முடி நீளமாக வளர தேவையான இலவச சிகிச்சை செய்வதாக கூறி உள்ளது.
ஆனால் அந்த முடி சிகிச்சையினால் அந்தப் பெண்ணிற்கு நிரந்தரமான முடி பாதிப்பு ஏற்பட்டதோடு உச்சந்தலை முழுவதும் அரிப்பு ஏற்பட்டது. முடி சிகிச்சைக்கு அதிக அளவிலான அமோனியா கலந்த தயாரிப்புகளை பயன்படுத்தியதே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தவறான முடி திருத்தத்தால் முடியை இழந்த பெண்..! 2 கோடி இழப்பீடு..!





