--- --:--:-- --

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பயிர்கள் நாசம்..!

9

ர்மபுரியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து 10 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்தை பெரும்பாலும் நம்பியுள்ளனர்.

 

அதிகளவு பொருட்செலவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இதில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த விவசாயிகள் வெட்டுக்கிளிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் வெட்டுக்கிளிகளை முழுமையாக அழித்து விவசாய பயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon