--- --:--:-- --

குழந்தை மீது செங்கல் விழாமல் தடுத்த தாய்..!

4

ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பதை விவரிக்க தேவையில்லை. ஒவ்வொரு தருணத்திலும் தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து தன் வாழ்க்கையை தியாகம் செய்பவள் தாய் தான்.

 

அதனாலேயே அம்மா என்றால் அனைவருக்குமே பிடிக்கும். சில நொடிகள் கூட தாயை விட்டு பிரியாத குழந்தைகள் தான் உலகில் அதிகம். எங்கு சென்றாலும் வீட்டிற்கு வந்த உடனே அம்மாவைத்தான் தேடுவோம். உலகின் எந்த நாடாக இருந்தாலும் இது பொருந்தும்.

 

ஓரறிவு கொண்ட உயிரினம் முதல் ஆறறிவு கொண்ட மனித இனம் வரை அம்மாவுக்கு தான் முதலிடம். தாயின் அன்பை பெற்று வளரும் குழந்தை சமூகத்தில் சிறந்த மனிதனாக உயர்வான வாழ்க்கை வாழும். தியாகத்தின் மறுபெயர் தான் அம்மா.

 

அந்த வகையில் தன் குழந்தையின் உயிரை காப்பாற்றும் தாயின் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தன்னுயிர் போனாலும் பரவாயில்லை தன் பிள்ளையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக செங்கல் தன் குழந்தை மீது விழாமல் தடுத்து காப்பாற்றுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon