குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் குடித்த 2 சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் உள்ள அந்த குளிர்பான விற்பனை கிடங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

அங்கிருந்து குளிர்பானத்தை வாங்கி குடித்த 2 சிறுவர்களும் ரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு முடியும் வரை விற்பனை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply