40க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
அருப்புக்கோட்டையில் இனிப்பு மற்றும் கார வகைகள் கடைகளில் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல் புகாரில் 200 லிட்டர் எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அங்கு அதிரசம், முறுக்கு, காரவகைகள் தயாரிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் எண்ணெயின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது 40க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.






