--- --:--:-- --

பச்சிளம் குழந்தைக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை..!

13

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் முதன்முறையாக பச்சிளம் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

 

ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து இதயத்துடிப்பு அதிகமானதால் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் இதயம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர் .அதன்பின் பச்சிளம் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருதயக் கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து குழந்தை அழத்தொடங்கியது.

 

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சை சேலம் அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon