--- --:--:-- --

அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார்..!

11

திருச்செந்தூர் சமயபுரம் திருத்தணி கோவில்களில் முப்பொழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். திட்டத்தின்படி 3 கோவில்களிலும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை உணவு வழங்கப்படும் என்றும் இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 7500 பக்தர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது போல மூன்று வேலையும் சாம்பார், ரசம், இரண்டு வகையான கூட்டு வழங்கப்படும் எனவும் விசேஷ நாட்களில் உணவுடன் சேர்ந்து அப்பளம் மற்றும் பாயாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon