ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு..!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைப்போல கட்சியின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.






