இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் பயங்கர விபத்து..!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த ரவி ராஜா என்பவர் சின்ன உடைப்பு விளக்கு அருகே வளைவு ஒன்றில் திரும்ப முயற்சிக்கும் போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அடிக்கடி விபத்து நடைபெறுவதை கண்டித்து அந்த பகுதியில் நடைபெற்ற சாலை மறியலின் போது பேருந்து மீது கல் வீசப்பட்டதில் ஓட்டுனர் உட்பட சிலர் காயமடைந்தனர்.






