--- --:--:-- --

வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருதரப்பினர் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறு..!

10

சென்னை தண்டையார்பேட்டை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருதரப்பினர் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சேர்ந்த இரு தரப்பினரும் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட பகுதியில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஒரு தரப்பினர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எதிரில் இருந்தவர்களை வெட்டியதாக கூறப்படுகிறது.

 

தாக்குதலில் தினேஷ், சுவராஜ், ஹேமந்த் ஆகிய 3 பேருக்கும் தலையில் வெட்டுக் காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக மணமகன் தரப்பினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon