காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்த காட்டுமாவடியில் இளம்பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறையை சேர்ந்த வினிதாவிற்கும், மணிகண்டனுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்தவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ பற்றியதாக கூறப்படுகிறது. திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து இறந்த நிலையில் இதுகுறித்து கோட்டாட்சியர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






