--- --:--:-- --

மின் கட்டணம் செலுத்துவதற்கான கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது நிறுத்தம்..!

5

மின் கட்டணம் செலுத்துவதற்கான கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

 

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் தங்கமணி மின்கட்டண நடைமுறை குறித்துதொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக ஆட்சியில் மின் கட்டணங்கள் செலுத்த மக்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறினார்.

 

அதாவது கடந்த மாதம் கட்டணம், கடந்த ஆண்டு கட்டணம், புகைப்படம் எடுத்து அனுப்புவது என மூன்று வாய்ப்பை பயன்படுத்தி மொத்தம் 14 லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் பேர் மின் கட்டணம் செலுத்தி உள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

மேலும் கடந்த ஆண்டை விட 40%மின் பயன்பாடு அறிவித்திருந்த போதும் 10 சதவீதம் அதாவது 80 கோடி தான் கூடுதலாக வசூலிக்க பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

 

2020 ஆகஸ்ட், 2021 ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் 32 சதவீத பயன்பாடு அதிகரித்து இருந்தாலும் கடந்த ஆண்டைவிட 22 கோடி மட்டும்தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மின் கட்டணம் செலுத்துவதற்கான கூடுதல் வைப்பு தொகை வசூல் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon