அரசு ஊழியர்களுக்கு 13 புதிய அறிவிப்புகள் வெளியீடு..!
அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி அரசு ஊழியர்கள் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்க தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவித்தார். வரும் ஜனவரி மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். ஓய்வு பெறும் வயது 58 வயதில் இருந்து அறுபது வயதாகும் உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






