--- --:--:-- --

கொரொனா மூன்றாம் அலை வீச தொடங்கியுள்ளதாக அமைச்சர் தகவல்..!

6

நாக்பூரில் கொரொனா பரவல் மூன்றாம் அலை வீச தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் தெரிவித்துள்ளார். செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரொனா மூன்றாம் அலை வீசும் என நிபுணர்கள் கணித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

நாக்பூரில் இரட்டை இலக்கத்தில் கொரொனா தொற்று பதிவாகி வருவதால் அங்கு மூன்றாம் அலை வீச துவங்கி விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து நாக்பூரில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் விரைவில் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் நாக்பூரில் தொற்று உறுதியான அனைவரும் மருத்துவமனை அல்லது ஹோட்டல்களில் கட்டாய குவாரன்டைனில் இருக்க வேண்டும் என நாக்பூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon