--- --:--:-- --

தமிழகத்தில் பள்ளிகளில் கொரொனா பரவல் அதிகமானால் பள்ளிகள் மூடப்படும்..!

9

தமிழகத்தில் பள்ளிகளில் கொரொனா பரவல் அதிகமானால் பள்ளிகள் மூடப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய மா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது தமிழகத்தில் மொத்தமாக 3 கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 677 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது 44 விழுக்காடு பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 15 விழுக்காடு பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழகத்தில் வருகிற 12-ஆம் நாள் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளதாக கூறிய அவர் அதற்காக கூடுதலாக தடுப்பூசியை ஒதுக்க வேண்டுமென ஒன்றிய அரசு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் தமிழகத்தில் பள்ளிகளில் கொரொனா பாதிப்பு அதிகமானால் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon