முதியவரை தாக்கிய கழுதைப்புலியை கொன்ற மக்கள்..!
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே முதியவரை கழுதைப்புலி ஒன்று விரட்டி சென்று கடித்த வீடியோ வெளியாகியுள்ளது. நடந்து சென்ற முதியவரை புதரில் மறைந்திருந்த கழுதைப்புலி திடீரென தாக்கியது.
இதனை கண்ட பாதசாரி ஒருவர் கழுதைப்புலியை கம்பால் அடித்து விரட்டியுள்ளார். இருசக்கர வாகனத்தில் மற்றொரு நபரையும் தாக்கிய கழுதைப்புலி பின்னர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு கழுதைபுலி தாக்கி இருக்கலாம் என்றும்அந்த பகுதி மக்கள் கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






