மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை..!
திருக்கோவில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமார் கோவில்களில் முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என அறிவித்திருப்பதன் மூலம் மொட்டை போடும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு திருக்கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டிருக்கும் 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.






