--- --:--:-- --

வெற்றி கொண்டாட்டத்தில் தலிபான்கள் சுட்டபோது 17 பேர் பலி..!

6

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுநடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் அடுத்து மீதமுள்ள பகுதியை கைப்பற்ற போரிட்டு வருகின்றனர். இந்த போரில் தங்கள் படைகளின் முன்னேற்றத்தை கொண்டாடும் வகையில் தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர் .

 

இதில் தவறுதலாக குண்டு பாய்ந்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என தலிபான் படையினருக்கு அந்த அமைப்பின் தலைமை உத்தரவிட்டு உள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பான அறிவிப்பை தலைவர்கள் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon