--- --:--:-- --

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 12 வயது சிறுவன் பலி..!

5

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் இன்று காலை மரணம் அடைந்துவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் இந்த சிறுவன் கடந்த 3ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிபா வைரஸ் பாதிப்பை உறுதி செய்துள்ள மத்திய அரசு கோழிக்கோட்டில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் குழுவை அவசரமாக அனுப்பி வைத்துள்ளது.

 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நிப்பா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon