--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்..!

2

கும்பகோணத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததோடு குற்றவாளியையும் விரைந்து கைது செய்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிரசவ வலியால் துடித்ததை மேற்கு காவல் நிலைய முதல் நிலை தலைமை காவலர் சுகுணா பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு சுகுணாவும் சக பெண் காவலர்களும் பிரசவம் பார்த்து பின் தாயையும் சேயையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார். துரிதமாக செயல்பட்ட மகளிர் காவலர்களை எஸ்‌பி ரவள பிரியா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon