பதினோரு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் மீண்டும் குடும்பத்திடம் ஒப்படைப்பு..!
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பதினோரு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவர் தொண்டு நிறுவனத்தின் உதவியால் பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறை மூலம் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டார்.
பெரம்பலூர் புறநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் ஆறு ஆண்டுகளாக லக்ஷ்மி என்கிற பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்த குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் அந்த மாநில காவல் துறைக்கு லக்ஷ்மியின் புகைப்படம் குறித்த தகவல்களை அளித்துள்ளார்.
தெலுங்கானா காவல்துறை உதவியுடன் லட்சுமியின் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் லட்சுமியை ஒப்படைத்தனர். பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு லட்சுமி தனது கணவருடன் இணைந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




