--- --:--:-- --

ஆபாச வீடியோக்களை 24 மணி நேரத்தில் அகற்றி விடலாம்..! பெண்கள் அச்சப்பட வேண்டாம்..!

3

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாச வீடியோக்களை 24 மணிநேரத்தில் அகற்றி விடலாம் என்பதால் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வருமாறு கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டப் படுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகி தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றனர்.

 

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ஆபாச வீடியோக்களை 24 மணிநேரத்தில் அகற்றி விடலாம் என்பது தெரியாமல் பலர் உள்ளதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வராமல் eservices.tnpolice.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon