--- --:--:-- --

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை..!

1

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி எதிர்க்கட்சித் தலைவருடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்றார்.

 

காணொளி காட்சி வாயிலாக சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதலமைச்சர் தாக்கி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல்காந்தி மல்லிகார்ஜுன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

இன்று நடைபெறும் கூட்டத்தில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது மாநில தேர்தல்களில் கூட்டணி வியூகம் பார்ப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon