--- --:--:-- --

சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறாரா..?

12

டிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

 

மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

அடுத்ததாக நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடிக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து மேலும் இரண்டு கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மலையாளத்தில் ஹிட்டான லூசிபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்து வருகின்றனர்.

 

அப்படத்தில் நயன்தாரா சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு கணவராக சத்யதேவ் என்ற நடிகர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon