மருத்துவ கல்லூரி மாணவி ஓட்டி வந்த கார் மோதி விபத்து..!
குன்றத்தூர் அருகே காவியா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது.
மேலும் 12 வயது சிறுமி உட்பட 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
விபத்திற்கான காரணம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






