பெரிய குரங்கை முழுவதுமாக விழுங்கிய மலைப்பாம்பு.!
குஜராத் மாநிலம் வதோதராவில் நதியிலிருந்து மீட்க்கப்பட்ட மலைப்பாம்பு, விழுங்கியிருந்த பெரிய குரங்கை வெளியே கக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அப்போது அங்கு இருந்த குரங்கை வனத்துறை அதிகாரிகள் வெளியே கக்க வைத்தனர். கக்கியவுடன் வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாப்பாக கொண்டுவிடப்படும் என்று கூறியுள்ளனர்.






