--- --:--:-- --

வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு 4 கோடி ரூபாய் பரிசு..!

4

லிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு 4 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

 

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை தீர்மானிக்கும் போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் வீரரை எதிர்த்து இந்தியாவின் ரவிக்குமார் தாகியா விளையாடினார்.

 

கடும் போட்டி நிலவிய இந்த ஆட்டத்தில் அவரை 7க்கு 4 என்ற கணக்கில் வெற்றியை எட்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ரவிக்குமார் தாக்கியதில் பாராட்டும் வகையில் அவருக்கு நான்கு கோடி ரூபாய் பரிசு என ஹரியானா மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon