கணவர் அடித்து துன்புறுத்தியதில் மனைவிக்கு மூளை நரம்பு பாதிப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


துரையில் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழந்த மனைவி தன் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 

மதுரையில் 19 வயதான மகாலட்சுமி என்பவருக்கும் அவரது உறவினரான சந்தானம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு தகராறு ஆக மாறியது.

 

சந்தானம் மனைவி மகாலட்சுமியை அடித்து பின்புறத்தில் தலையணையால் முகத்தில் அழுத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகாலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மூளை நரம்பு பாதிக்கப்பட்டு கை, கால்கள் முழுவதும் செயலிழந்தன.

 

தனக்கு மருத்துவ நிதிக்கு ஏற்பாடு செய்ய கோரியும், கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தனது குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply