ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Reply