சொத்து தகராறில் தன் மகனை அடித்துக் கொலை செய்த தந்தை..!
ரிஷிவந்தியம் அடுத்த கீழடி கிராமத்தில் சொத்துக்காக தன் மகனையே தடியால் அடித்து தந்தை கொலை செய்துள்ளார். கீழடி கிராமத்தில் வசித்து வரும் அண்ணாமலைக்கும், தன் மகனுக்கும் அடிக்கடி சொத்து பிரச்சினை நடந்து வருவதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 3 ஏக்கர் நிலம் சொத்து தொடர்பாக இவர்கள் விவாதித்த போது கோபமடைந்த அண்ணாமலை தான் பெற்ற மகன் என்றும் பாராமல் பெரிய தடியால் அடித்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினர். மேலும் உடற்கூறு ஆய்வுக்காக அரசு பொது மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பிவைத்தனர். இதனையடுத்து கொலை செய்த அண்ணாமலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






